• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை போலீசாருக்கு பாராட்டு..,

ByS.Ariyanayagam

Feb 25, 2026

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அம்பாத்துரை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (24) என்பவரை செம்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் அறிவுறுத்தலின்படி, செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், நீதிமன்ற தலைமை காவலர் கார்த்திகை வேணி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி சீரிய முயற்சியால் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி சக்திவேல் என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். இந்த ஆண்டு 02 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.