• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கவிஞர் வாலி பிறந்தநாள் விழா!

Byஜெ.துரை

Oct 24, 2025

இந்தியாவிலேயே அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்பட பாடல் ஆசிரியர் பத்மஸ்ரீ வாலி.

அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர் எம்ஜி ஆர் என்ற இரு பெரும் தலைவர்களாலும் நேசிக்கப்பட்டவர்.

வாலி பதிப்பகம் சார்பில் காவியக் கவிஞர் வாலியின் 94 வது பிறந்தநாள் விழா 1.11.2025 சனிக்கிழமை மாலை இறைச்செல்வர் சிவாலயம் மோகன் அவர்கள் தலைமையில் பண்பாளர் நெல்லை பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் சென்னை தியாகராயநகர் கவியரசு கண்ணதாசன் சிலை அருகில் உள்ள பிடி தியாகராயர் அரங்கில் நடைபெற உள்ளது.

வருடம் தோறும் 50,000 பொற்கிழியுடன் வழங்கப்படும் வாலி விருது இந்த ஆண்டு எழுத்தாளர் மாலன் அவர்களுக்கும் கவிஞர் கங்கை அமரன் அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது விருதுகளை திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ் வழங்குகிறார்.

திரைப்பட உதவி இயக்குனர் கவிஞர் பதுமை செல்வன் எழுதிய வாலியின் திரைப்பாட்டு முழக்கங்கள் எனும் நூலை திரைப்பட இயக்குனர் லிங்குசாமி வெளியிடுகிறார்.

ஊற்றங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமால் முருகன் அவர்கள் நூலினைப் பெற்றுக்கொள்கிறார்

வாணியம்பாடி முத்தமிழ் மன்ற செயலாளர் நா.பிரகாசம் கவிஞர் வாலியின் திருவுருவப்படத்தினை திறந்து வைக்கிறார்.

மேடையில் உள்ள மேன்மையாளர்களை பம்பர் திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் கௌரவிக்கிறார்.

வாலி பதிப்பக நிர்வாக இயக்குனர் பொறியாளர் பாரதி சங்கர் வரவேற்புரை ஆற்றும் இந்த நிகழ்ச்சியை திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் சிவகுருநாதன் ஒருங்கிணைக்கிறார்

முன்னதாக மாலை 5 மணிக்கு திரைப்பட இசையமைப்பாளர் தாயன்பன் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் பங்கேற்று வாலியின் திரை இசைப்பாடல்களை பாடுகிறார்கள்.