• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ : இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!

Byவிஷா

Mar 22, 2023

விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் கையெழுத்தாகிறது.
சென்னை, இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா விருதுநகரில் இ. குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியுஷ் கோயல் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியுஷ் கோயல் முன்னிலையில் ஜவுளிப்பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.