• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பரவும் புதிய வகை கொரோனா-முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் ஆலோசனை

Byகாயத்ரி

Nov 27, 2021

கோவிட்-19 நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் விகே பால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஆப்ரிக்க நாடுகளில் வீரியமிக்க கொரோனா பரவி வரும் நிலையில் அரசு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். புதிய கொரோனாவான ‘ஒமிக்ரான்’ பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் மற்றும் இந்த நாடுகளின் வழியாக வருபவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புகளின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசிகளை தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் கூறியுள்ளார்.இந்தியாவில் நேற்று தினசரி பாதிப்பு சற்று அதிகம் காணப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது. கடந்த 24-ம் தேதி 9,283-க்கும், 25-ம் தேதி 9,119 பேருக்கும், 26-ம் தேதி 10,549 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும் இன்று 8,318 பேருக்கு கொரோனா கண்டறியபட்ட நிலையில் 465 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 10,967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு நேற்று தகவல் தெரிவித்தது. பிப.1.1529 என்ற புதிய வகை கொரோனா ஆப்ரிக்க நாடுகளில் பரவி வரும் நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. தென் ஆப்பிக்கா உள்பட 3 நாடுகளிலிருந்து இந்தியாவரும் பயணிகளை ஏர்போர்ட்டிலேயே பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தில் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் நேற்று கூறப்பட்டது.