• Sun. Jan 4th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்துக்கு ஆதரவாக லீபுரம் ஊராட்சி பகுதிகளில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட வட்டக்கோட்டை, ஆமணக்கன்விளை, கிருஷ்ணன்புதூர், ஆரோக்கியபுரம், லீபுரம், கல்லுவிளை, மெஞ்ஞானபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் தா.கோயில்பிள்ளை, லீபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.முத்துசுவாமி, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.