• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

போகி பண்டிகைக்கு பிளாஸ்டிக்
எரிக்க தடை: சென்னை மாநகராட்சி

போகி பண்டிகைக்கு பொதுமக்கள் பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க்க வேண்டுமென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- போகிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வருகிற 13 மற்றும் 14ம் தேதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை எரிப்பதை தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே சென்னையிலுள்ள 1-வது முதல் 15-வது வரையிலான மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும், மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தவிர்த்து, அவற்றை தனியாக மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக, பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.