பெங்களூருவில் கனமழை சூரைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
நீண்ட நேரமாக காத்திருந்து ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கி வருகிறது .
பெங்களூரு விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பெங்களூரு விமான நிலையத்திற்கு பல்வேறு நகரங்களில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு தரையிறங்குவதற்காக அனுமதி பெறப்பட்டு பயணிகள் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
குறிப்பாக சிலிகுரியில் இருந்து பெங்களூர் சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் துர்காபூர் விமான நிலையத்திலிருந்து பெங்களூர் சென்ற தனியார் பயணிகள் விமானமும்

அயோத்தியில் இருந்து பெங்களூர் சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம். அந்தமானில் இருந்து பெங்களூர் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்

ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் என ஐந்து விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வட்டமடித்து கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு தரையிறங்குவதற்கு அனுமதி கேட்டனர் . அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானத்தில் வட்டமடித்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தற்சமயம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி வருகிறது.

பயணிகள் விமானத்திலேயே தங்க வைக்கப்பட்டு உணவு தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படும். பெங்களூரு விமான நிலையத்தில் வானிலை சரியான பிறகு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெங்களூரில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சென்னையில் தரையிறங்கி வருவதால் வழக்கமாக சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை தாமதமாக இறங்கி வருகிறது.

இரவு 9 மணி வரை மழை நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் சூறைக்காற்றின் வேகத்தை பொறுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு விமானங்கள் புறப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
