மதுரை மேல பொன் நகரம் அண்ணா வீதியை சேர்ந்த முருகன் வயது 63 இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 8:30 மணி அளவில் தனது இல்லத்தில் ஆரப்பாளையம் வழியாக குரு தியேட்டர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சின்னமனூர் செல்லக்கூடிய தனியார் ஒரே திசையில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது மஞ்சள் மேடு என்கின்ற பகுதிக்கு அருகே வரும் பொழுது இருசக்கர வாகனம் வலது புறமாக திரும்பியதில் இவர் நிலை தடுமாறி வலது புறம் கீழே விழுந்தால் அப்பொழுது பேருந்தில் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் எறிந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உதவி ஆய்வாளர் பொன் முனியாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இதே பகுதியில் அரசு பேருந்து ஒன்று தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.