• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புகைப்படக் கலைஞர் விபத்தில்பலி..,

ByRadhakrishnan Thangaraj

Dec 14, 2025

இராஜபாளையம் தென்காசி சாலையில் தனியார் ஹோட்டல் அருகே சிவகிரி சேர்ந்த புகைப்படக் கலைஞர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி குமாரபுரம் மேலத்தெரு நாகமணி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த கடற்கரை மகன் குருநாதன் வயது 34 இவர் சிவகிரி பகுதியில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை சேந்தமரம் பகுதியில் திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்துவிட்டு சிவகிரி சென்று தனது ஸ்டுடியோவை திறந்து வைத்துவிட்டு மாலையில் நடைபெற உள்ள நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக சிவகிரியில் இருந்து இராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமிழ் ஓட்டல் அருகே குருநாதன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது முன்பு சென்ற கார் இடதுபுறமாக ஹோட்டலில் உணவு அருந்த திரும்பிய பொழுது குருநாதன் வாகனத்தில் வைத்திருந்த அம்பர்லா லைட் ஸ்டாண்ட் காரில் பின்பகுதியில் இடித்ததில் நிலை தடுமாறி வலது புறமாக கீழே விழுந்துள்ளார். பின்புறமாக வந்த 407 வேன் தலை மீது ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயரிழந்தார் .

தலைக்கவசம் அணிந்திருந்த பொழுதும் தலை மீது வேன் ஏரியதில் தலை நசிங்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த சம்பவம் குறித்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

உயிரிழந்த புகைப்பட கலைஞர் குருநாதனுக்கு திருமணமாகி வேலம்மாள் என்ற மனைவியும் கடலரசன் என்ற 8 வயது மகனும் .யாழினி என்ற 4 வயது மகனும் உள்ளனர்