நாட்டு மக்களின் நலன் கருதி மத்திய அரசு, உடனே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என புதுச்சேரி வளர்ச்சிக் கட்சித் தலைவர் எஸ். பாஸ்கரன் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி மாநில அரசுகள் இவ்விசயத்தில் மத்திய அரசோடு ஒத்துழைக்காது என்பதே நிதர்சனம். எனவே மத்திய அரசு பணமதிப்பிழப்பு, காஷ்மீர், அயோத்தி, நீட் போன்ற பிரச்சினைகளில் எடுத்ததுபோன்ற அதிரடி முடிவை எடுத்து நாடு முழுவதும் உடனே அமுல்படுத்திடவேண்டும்.
இதுவே மக்கள் நல அரசு செய்யவேண்டியதாகும். ஜிஎஸ்டி’க்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரவேண்டியது காலத்தின் கட்டாயம் என பாஸ்கரன் கூறுயுள்ளார்.