• Tue. May 14th, 2024

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளரிடம் கோரிக்கை மனு..,

Byகுமார்

Sep 25, 2023

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளரிடம் கோரிக்கை மனு,

மேலும் கட்டாயப்டுத்தினால் வரும் 3ம் தேதி ஏற்கனவே வாங்கப்பட்ட இயந்திரங்களை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களிளில் ஒப்படைத்துவிட்டு, அனைத்து பணியாளர்களும் தொடர்விடுப்பில் செல்வது என போராட்டம் அறிவிப்பு..,

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக பெருந்திரள் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைப்பின் மாவட்ட செயலாளர் கணேசன்,

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் வாகனங்கள். இயந்திரங்கள், விவசாய உபகரணங்களை சங்கங்களை வாங்கச் சொல்லி கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளால் நிர்ப்பந்தம் செய்வதாகவும். ஏற்கனவே இது போன்று கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட பவர் டில்லர், நடவு இயந்திரம், டிராக்டர் போன்றவைகள் பழுதடைந்து உபயோகப்படுத்த இயலாத நிலையில் பல சங்கங்களில் பயனற்று இருக்கிறது. இதனால் பல சங்கங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. ஏற்கனவே சங்கங்களில் ஆள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் அடிப்படை பணியான விவசாயிகளுக்கு கடன் வழங்குதல், வசூல் செய்தல், சட்டப்பூர்வ பணிகள் உரம் விநியோகம் பல்வேறு புள்ளி விபரங்களை வழங்குதல், அத்தியாவசியப்பொருட்கள் விநியோகம் என பெரும் பணிச்சுமைகளுக்கிடையே பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், பல்நோக்கு சேவை மையம் என்ற புதுப்பெயரில் போதிய பணியாளர்களோ, இத்திட்டங்கள் குறித்து எவ்வித தொழில் அனுபவமோ இல்லாத நிலையில் பல லட்சங்களை முதலீடு செய்து ஒவ்வொரு சங்கங்களும் செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று நிர்பந்தம் செய்வது சங்கங்களையும், பணியாளர்களையும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல் என்பதால் இத்திட்டங்களை நிர்பந்திக்க கூடாது என வலியுறுத்தி இன்று மதுரை மண்டல இணைப்பதிவாளர் அவர்களிடம் முறையீடு செய்துள்ளோம். இந்நிலை தொடருமானால் எதிர்வரும் 03.10.2023 அன்று இத்திட்டங்களின் மூலம் ஏற்கனவே வாங்கப்பட்ட இயந்திரங்களை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களிளில் ஒப்படைத்துவிட்டு, அனைத்து பணியாளர்களும் தொடர்விடுப்பில் செல்வது என மாநில சங்கம் அறிவுறுத்தியுள்ளதாகவும். மதுரை மாவட்டத்திலுள்ள 170 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் அனைத்துப் பணியாளர்களும் கலந்து கொள்வோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *