கப்பலூரில் நெடுஞ்சாலை பணியின் போது அகற்றப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவக்கோரி, பாஜக மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
மதுரை பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், விஜய நகர பேரரசு நாயக்கர் வரலாற்று மீட்பு குழு மற்றும் நாயக்கர் வம்சம் மாநிலத் துணைத் தலைவர் பாஸ்கரன் நாயுடு, மதுரை பெரியார் நிலையம் பகுதியில் உள்ள கட்டபொம்மன் சிலை பராமரிப்பு நிர்வாகிகள் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது. அம்மனுவில் கூறியுள்ளயாதெனில், மதுரை திருமங்கலம் கப்பலூரில் நெடுஞ்சாலை பணியின் போது, அகற்றப்பட்ட சுதந்திர போராட்ட மாவீரர் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது சிலையை அகற்றிய இடத்தில் மீண்டும் அதே சிலையை நிறுவக்கோரி, கடந்த 20 ஆண்டு காலமாக பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்ற நிலையில் இன்றுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை, இனியும் காலம் தாழ்த்தாமல் தேசத்தின் சுதந்திரப் போராட்ட மாவீரர் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் உயிர் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அவரது சிலையை அகற்றிய இடத்தில் மீண்டும் அதே சிலையை நிறுவ ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது, இந்நிகழ்வில் மதுரை பாஜக மேற்கு மாவட்ட மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.









