திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில். மனுதாரரான ராம ரவிக்குமார் அந்தத் தீர்ப்பின் நகலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அலுவலகத்தில் வழங்கினார்.

மேலும் அந்த தீர்ப்பின் அடிப்படையில் மலை மீது தீபம் ஏற்ற வில்லை என்றால் மனுதாரர் ஆகிய தான் மலை மீது தீபம் ஏற்ற அனுமதியும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று மனு அளித்தார். அதைத்தொடர்ந்து மதுரை மாநகர காவல் இணை ஆணையர் இனிகோ திவ்யனிடம் அந்த மனுவை வழங்கினார். மனுதாரராகிய ராம ரவிக்குமார் இன்று காலை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் நகலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வைத்து சாமி வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் பேசுகையில்:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பின் அடிப்படையில் மலை உச்சியில் தீபத்தூரில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக அந்த நகலை அதிகாரிகளிடம் கொடுக்கிறோம். நீதிமன்ற உத்தரவை திருக்கோவில் நிர்வாகம் அமல்படுத்த வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் மனுதாரர் ஆகிய எங்களுக்கு தீபம் ஏற்ற அனுமதியும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்ற மனுவை வழங்குகிறோம். திருக்கோவில் நிர்வாகம் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி நாளை காலை மழை உச்சியில் தீபம் ஏற்றும் என்று அனைவர் சார்பாக கோரிக்கை வைக்கிறோம் எனக் கூறினார்.








