• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு..,

ByR. Vijay

May 20, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரிசி ஆலைகளை இயங்கவிடாமல் தடுக்கும் தனியார் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகப்பட்டினம் மாவட்ட அரிசி ஆலை லாரி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.

நாகப்பட்டினம் மாவட்ட அரிசி ஆலை லாரி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் டிஆர்ஓ பவணந்தியை பார்த்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் அரிசி ஆலைகளில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகின்றோம்.

எங்களிடம் நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் ஆகிய பகுதியை சேர்ந்த தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் நெல் இயக்கத்தில் 90 சதவீதம் வரை அவர்களே மேற்கொள்கின்றனர். 10 சதவீதம் நெல் இயக்கத்தை மட்டுமே நாங்கள் மேற்கொள்கிறோம்.

அரிசி ஆலைகளை இயங்கவிடாமல் செய்து முடக்கி வருகின்றனர். அரிசி ஆலைகளை முடக்குவதால் 300க்கும் மேற்பட்ட எங்களது தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.