• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பத்திர அலுவலக சார் பதிவாளரை இடமாற்றம் செய்யக்கோரி பாமக மனு

Byp Kumar

Feb 27, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி- செல்லம்பட்டி பத்திர அலுவலக சார் பதிவாளரை இடமாற்றம் செய்யக்கோரி பாமக சார்பில் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் சார்பதிவாளர் மீனாட்சி என்பவரை இடமாற்றம் செய்யக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். செல்லம்பட்டி சார் பதிவாளர் மீனாட்சி விவசாய நிலங்களை சிறுசிறு பகுதியாக உடைத்து அன்- அப்ரூவல் பிளாட் மனையிடமாக அங்கீகாரம் பெறாமல் விவசாய நிலங்களை முறைகேடாக பதிவு செய்து வருவதாகவும், பத்திரப்பதிவுக்காக 5000 ரூபாய் லஞ்சம் கொடுக்கும் படி கட்டாயப்படுத்தி வருவதாகவும் செல்லம்பட்டி கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.


மேலும் ஒரு சென்ட் நிலத்திற்கு 5000 ரூபாய் கொடுத்து ரியல் எஸ்டேட் உரிமையாளர்களோடு சேர்ந்து சார்பதிவாளர் மீனாட்சி செயல் பட்டு வருகிறார் எனவும், சட்டத்துக்கு உட்பட்டு தகுந்த ஆவணங்களை பரிசீலனை செய்து பத்திர பதிவை மேற்கொள்ளும் படியும் இந்த அவல நிலையிலிருந்து மக்களை காப்பாற்றும் படி செல்லம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் மீனாட்சி என்பவருக்கு பதிலாக வேறொரு நபரை நியமிக்கும்படி மதுரை தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மற்றும் செல்லம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். நிகழ்ச்சியில் பாமக மாவட்ட செயலாளர்கள் கிட்டு, அழகர்சாமி, செல்வம் மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்