திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவில் வேள்வி சாலையில் முதலில் தமிழர்களை வேள்வி நடத்த அனுமதித்த பிறகு சமஸ்கிருத வேள்வியாளர்களை அனுமதிக்க வேண்டும்.

மூலவர் கோபுரம் மற்றும் ராஜ கோபுரத்திற்கு எத்தனை இடத்தில் குடமுழுக்கு அருள் நீரை எத்தனை பிராமண சமஸ்கிருத சிவாச்சாரியார்கள் நடத்துகிறார்களோ அத்தனை இடத்திலும் தமிழும், தமிழர்களும் அருள் நீரை எடுத்துச் சென்று குடமுழுக்கு முதலில் நடத்த வேண்டும். -தெய்வத் தமிழ்ப் பேரவை*
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஜூலை 14ஆம் தேதி கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ் பேரவை சார்பாக திருப்பரங்குன்றம் இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருச்செந்தூரில் வரும் ஏழாம் தேதி குடமுழுக்கு நிகழ்ச்சி தமிழிலும் நடத்தப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்த நிலையில், திருப்பரங்குன்றத்திலும் தமிழில் நடத்தப்பட வேண்டும் என சொன்னேன் தெய்வத் தமிழ் பேரவை சார்பாக திருப்பரங்குன்றம் இந்து அறநிலைத்துறை கண்காணிப்பாளர் ரஞ்சனியிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் நீதிமன்றத்தில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் இங்கயும் தமிழில் நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருள் நீர் ஊற்றும் நிகழ்விலும், வேள்விசாலையிலும், தமிழும் தமிழரும் சமஸ்கிருத பிராமணர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் நடத்த வேண்டும். மேலும் அந்த வேள்விச் சாலையில் முதலில் தமிழர்களை வேள்வி நடத்த அனுமதித்த பிறகு சமஸ்கிருத வேள்வியாளர்களை அனுமதிக்க வேண்டும்.
மூலவர் கோபுரம் மற்றும் ராஜ கோபுரத்திற்கு எத்தனை இடத்தில் குடமுழுக்கு அருள் நீரை எத்தனை பிராமண சமஸ்கிருத சிவாச்சாரியார்கள் நடத்துகிறார்களோ அத்தனை இடத்திலும் தமிழும், தமிழர்களும் அருள் நீரை எடுத்துச் சென்று முதலில் நடத்த வேண்டும். அதன் பிறகு தான் ராஜா பட்டர் போன்ற சமஸ்கிருத பாடசாலை போன்றவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம்.
ஒருவேளை உங்களிடம் சமஸ்கிருத வேள்வியாளர்கள் மட்டும்தான் உள்ளார்கள் என்றால் நாங்கள் நடத்திக் கொள்கிறோம் எங்களை அனுமதியுங்கள். ராஜா பட்டர் சமஸ்கிருத வேள்வியாளர்கள் தான் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்கிறோம்.

அப்படி தமிழில் வேள்வி நடத்த ஆள் இல்லை என்றால் உங்களைப் போல் தெய்வ தமிழ் பேரவையில் உள்ள அனைத்து தமிழின குரு பீடத்தை சார்ந்தவர்கள் நடத்திக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள் நாங்கள் செய்கிறோம் என்று சொல்லி இருக்கிறோம்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சமஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என்று சொல் வேண்டும், தமிழிலும் நடத்தப்படும் என்று சொல்லக்கூடாது. தமிழை முதன்மைப்படுத்தி தமிழ் முதலில் அனுமதிக்கப்பட்டு அதன் பிறகு அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சமஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என்று சொல்ல வேண்டுமே தவிர, தமிழிலும் நடத்தப்படும் என்று சொல்வது வேதனைக்குரியது என தெய்வ தமிழ் பேரவை சந்தியபாமா கூறினார்.