காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் காவல்துறை சார்பாக கூடுதல் பாதுகாப்பு அளித்து, வாகன சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறது.
காஷ்மீரில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் மதுரை விமான நிலையத்தில் தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் சோதனைக்குப் பிறகு காவல்துறையினர் அனுமதிக்கின்றனர்.
