உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் 146 வது தந்தை பெரியார் பிறந்த நாள் விழா திராவிட கழகம் மற்றும் மறுமலர்ச்சி திராவிட கழகம் சார்பாக சமூக நீதி நாள் கொண்டாடப்பட்டது.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கே.போத்தம்பட்டி ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ம.தி.மு.க மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் திராவிடர் கழகம் பொதுக்குழு உறுப்பினர் மன்னர் மன்னன் நகரச் செயலாளர் பவுன்ராஜ் கவிஞர் வேல்முருகன் ம.தி.மு.க.நகர செயலாளர் ஜெ.டி.குமார் ஒன்றிய செயலாளர் பெரிய பாண்டி பொதுக்குழு உறுப்பினர்கள் மகேந்திரன் புலிப்பாண்டி முன்னிலையில் பெரியார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.

விழாவில் எழுமலை அய்யாத்துரை தேனி ரோடு ஆட்டோ சங்கம் மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
