• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்!

ByT.Vasanthkumar

May 6, 2025

பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 07.05.2025 – புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

தமிழக முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., அறிவுறுத்தலின்படி, போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா‌.சி.சிவசங்கர் ஆலோசனைக்கிணங்க, பெரம்பலூர் மாவட்ட கழக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், கே.என்.அருண்நேரு.எம்.பி.,- சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், ஆகியோரது முன்னிலையில் , 07.05.2025, புதன்கிழமை, மாலை 3.00 மணிக்கு, பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் தங்க.சித்தார்த், குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதில் மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொருள்!
மாண்புமிகு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 03.05.2025, அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து,

ஜீன்-01, மதுரையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் குறித்து,

ஜீன்-03,முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி குறித்து,

நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் மற்றும் கழக ஆக்கப்பணிகள்.