புதுச்சேரி மன்னாடிபட்டு தொகுதிக்கு உட்பட்ட வாதனூர், புராணசிங்கு பாளையம் கொடாத்தூர், சந்தை புதுகுப்பம்,காட்டேரி குப்பம், உள்ளிட்ட பகுதிகளில் 85 லட்ச ரூபாய் மதிப்பில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கடப்பாறை பிடித்து வேலை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் நமச்சிவாயத்தை சூழ்ந்து கொண்ட பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் குறைவான நாட்களே வேலை வழங்குவதால், சிரமமாக உள்ளது. எனவே நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை குறைந்தது ஆறு மாதமாவது வழங்க வேண்டும் வலியுறுத்தினார்கள்.
அப்போது பெண்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம் ஆறு மாதம் நீட்டித்து தருவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் 100 நாள் என்பதை மேலும் சில நாட்கள் அதிகப்படுத்தி வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.













; ?>)
; ?>)
; ?>)