நாளுக்கு நாள் தங்களுடைய அன்றாட நிகழ்வுகளையும் சுப நிகழ்வுகளையும் போஸ்டர் அடித்து ஒட்டுவதில் மதுரைக்காரர்களுக்கு நிகர் மதுரைக்காரர்கள் மட்டுமே , இந்த நிலையில் நன்றி நன்றி நன்றி என்று குறிப்பிட்டு தெரு நாய்கள் கடியில் இருந்து குழந்தைகளை முதியவர்களை பொதுமக்களை காப்பாற்ற தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி.

டாக் ஷெல்டர் அமைத்து தெரு நாய்களுக்கு உணவு கருத்தடை தடுப்பூசிகள் அளித்து காப்பாற்ற உத்தரவு பிறப்பித்த ராபிஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கு நன்றி என்றும்,
நீதிபதிகளுக்கும் இதை நிறைவேற்றப் போகும் மத்திய மாநில அரசுகளுக்கும் கோடி நன்றிகள் என்று குறிப்பிட்டதோடு மட்டுமல்லாது இவன் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் என குறிப்பிட்டது.
மதுரையின் முக்கிய பகுதிகளில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.