புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் (சத்தியமூர்த்தி சாலை) கிங்ஸ் பேக்கரி அருகில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பம். மின் வாரிய ஊழியர்களே இந்த மின் கம்பத்தில் ஏறும்போதுஒடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் ஏறப் பயப்படுகிறார்கள்.

எந்த நேரத்திலும் ஒடிந்து விழும் அபாயத்தில் இருக்கிறது. இவ்வளவு மோசமான நிலையில் இருக்கும் மின்கம்பத்தால் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடும் முன்பாகவே மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை மாற்ற வேண்டும்.