தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, வரதராஜ் நகர் பகுதியில் இயங்கி வரும் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலையில் இருந்து தினந்தோறும் வெளியேறும் புகை மற்றும் தூசுகளால் மக்கள் தினந்தோறும் மூச்சு திணறல் மற்றும் பல்வேறு விதமான நோய்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வரதராஜ் நகர் பகுதியில் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஆலைக்கு தேனி, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் விளைவிக்கும் நாட்டு கரும்புகள் கொண்டு வந்து அரவை செய்யப்படுகிறது.
இந்த தொழிற்சாலையில் இருந்து திறந்தவெளியில் வெளியேறும் புகை மற்றும் தூசுகள், அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் கண் சம்மந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.




