விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.சொக்கலிங்காபுரம் கிராமத்தில்
சாமியார் கண்மாய் உள்ளது. அந்த கண்மாய் மழை காலத்தில் தண்ணீர் நிரம்பி மறுகால் செல்லும் ஓடை சர்வே எண்.103/1 ல் உள்ளது. மேற்படி ஓடையின் கரையின் வழியாக தான் அப்பகுதி விவசாயிகள் மற்றும் சுடுகாட்டுக்கு இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு கொண்டு செல்லும் பாதையாக பயண் படுத்தி வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் மறுகால் செல்லும் ஓடையை தனி நபர் ஒருவர் மண்ணை கொட்டி மூடி தனது விளை நிலத்துடன் சேர்த்து தடுப்பு கம்பிகள் அமைத்ததால் அந்த பகுதியில் உள்ள சுமார் இருபத்து ஐந்து ஏக்கர் நிலத்தின் விவசாயிகள் மழை காலத்தில் தங்களின் நிலங்களுக்கு செல்ல முடியாமலும் இறந்தவர் உடலை அந்த வழியாக கொண்டு செல்லமுடியாமல் திண்டாடி வருகின்றனர். எனவே ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்றி கொடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திடீரென யாரேனும் மரணம் அடைந்து விட்டால் சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பாதை இல்லை என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனால் அரசு அதிகாரிகள் உடனே தலையிட்டு எங்களுக்கு இந்த வழித்தடத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்று கூறினார்