• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தி.மு.க ஆட்சியில் மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர்-இபிஎஸ் பேட்டி

ByA.Tamilselvan

Oct 5, 2022

திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர் என அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேட்டி
தென்காசி வடக்கு மாவட்ட சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் உட்பட 100 பேர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனி பேசும்போது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரித்த கோர்ட்டில் 95 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதை தெரிவித்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு பொதுச் செயலாளர் தேர்தலை தற்போது நடத்தக்கூடாது என்று கூறியுள்ளது. ஆனால் தடை விதிக்கவில்லை, நாங்களும் வழக்கு முடியும் வரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று உறுதி கூறியுள்ளோம்.
தமிழகத்தில் அரசு பணி மிகவும் மெத்தனமாக நடைபெறுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் தற்போது தி.மு.க ஆட்சியில் நிறுத்தி வைத்துள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பெரிதாக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. கோவையில் 133 ஒப்பந்தங்கள் கொண்டு வரப்பட்டு 11 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால் அதிகமாக கமிஷன் கேட்பதுதான்.
மின் கட்டணம் 53 சதவீதம் அதிகரித்துள்ளது, சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது .இதனால் மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர். அனைத்து தரப்பினரும் தினமும் துன்பத்துடனும், வேதனையும் தவித்து வருகிறார்கள் . இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, எம்.எல்.ஏ.க்கள் இசக்கி சுப்பையா, கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா உள்பட பலர் உடன் இருந்தனர்.