மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அதிமுக உசிலம்பட்டி நகர் கழக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயக்குமார்.,

மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகளை வழங்கவும், தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்களா என்ற ஆய்வை மேற்கொள்ளவும்., இன்று திமுக போய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள், அதற்காக ஒரு துரும்மை கூட கிள்ளி போடவில்லை, ஆனால் எதிர்கட்சியாக இருந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமத்ஷா அவர்களை சந்தித்து முறையிட்டு இன்று 125 நாள் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது.,
இதை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போல முடித்து வைக்கப்படுவதாக பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள், ஏற்கனவே திமுக அரசின் நிர்வாக குளறுபடியால் 100 நாள் வேலை திட்டத்தில் 50 நாள் கூட பணி வழங்குவதில்லை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும், அதே போன்று சம்பளமும் அதிகப்படியாக நிலுவையில் இருந்ததை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உள்துறை அமைச்சரை சந்தித்து 2999 கோடி பெற்று கொடுத்தார்கள்., திமுக அரசின் பொய் பிரச்சாரங்களை முரியடிக்கும் வண்ணம் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரங்களும், துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.,
எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது., ஆளும் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக உண்மையை தோழுரித்து காட்டுகிற காரணத்தினால் தேர்தல் சுரம் வந்து தேர்தல் பயத்தினால் தொடர்ந்து திட்டங்களை அறிவிக்கின்றார்கள்.,
கடந்த ஆண்டு பொங்கல் வந்தது ஆனால் பொங்கல் பரிசு மக்களுக்கு கிடைக்கவில்லை, நான்கரை ஆண்டுகாலம் மாணவர்கள் கல்லூரிக்கு சென்றார்கள் அவர்களுக்கு மடிகனிணி கிடைக்கவில்லை.,
இப்போது தேர்தல் பயத்தினால் ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார்கள், அரசு ஊழியர்களின் உட்சபட்ச கோபத்தினால் அவர்கள் கோபத்தை மடைமாற்றும் வகையில் திமுக கொடுத்த வாக்குறுதி பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என சொன்னார்கள், ஆனால் இன்று புதிய பெயரில் கொடுத்திருப்பது அரசு ஊழியர்களை ஏமாற்றுகிற ஒரு நாடகத்தை இரட்டை வேடத்தை போட்டிருப்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.,
ஸ்டாலின் அவர்களின் பகல் வேசம் இந்த அறிவிப்பு மூலம் வெளியாகி இருக்கிறது, ஆனால் ஏமாற்றுகிற வகையில் இனிப்பு ஊட்டுவதுமாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்., இதெல்லாம் எள்முனையளவும் பயன்பெற போவதில்லை., ஆகவே தேர்தல் பயத்தினால் கொடுத்த அறிவிப்பு தானே தவிர மக்கள் நலன் காக்கும் அறிவிப்பாக இல்லை.,

தேர்தல் வாக்குறுதி என்பது ஆட்சி அமைந்தவுடன் கொடுப்பது, ஆட்சி வீட்டுக்கு போகும் போது கொடுப்பது தேர்தல் வாக்குறிதியாக இருக்காது, அது ஏமாற்றுகிற வாக்குறுதியாக தான் மக்களால் உணர படுகிறது., இதற்கு தகுந்த தீர்ப்பு 2026 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.,
ஸ்டாலின் அவர்கள் எதை அறிவித்தாலும் சரி வீட்டுக்கு வீடு ஒரு கிலோ தங்கம் தருகிறேன் என அறிவித்தாலும் ஸ்டாலினை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை., எடப்பாடி பழனிச்சாமி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்., தமிழகத்தின் எதிர்காலத்தை எழுத கூடிய எட்டரை கோடி மக்களின் ஒரே நம்பிக்கை எடப்பாடி பழனிச்சாமி இது தான் தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் செய்தி என பேட்டியளித்தார்.,




