• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அமேசான் ப்ரைமில் இந்திய டாப்டென்னில் இடம்பிடித்த மக்கள் கொண்டாடும் ஹர்காரா திரைப்படம்.., வாழ்வின் தத்துவம் சொல்லி இணையத்தில் வைரலாகும் ஹர்காரா காட்சிகள் !!

Byஜெ.துரை

Oct 4, 2023

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையை நமது வாழ்வியலோடு அழகாக சொல்லும் ஹர்காரா திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் காட்சித்துணுக்குகள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், அருண் காஸ்ட்ரோ நடிப்பில் வெளியான திரைப்படம் “ஹர்காரா”. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அக்டோபர் 1 ஆம் தேதி இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

அமேசான் ப்ரைம் தளத்தில் இந்திய அளவில் ஹர்காரா திரைப்படம் டாப்டென்னில் நன்காம் இடம்பிடித்து, மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஓடிடி தளத்தில் குடும்ப பார்வையாளர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழில் மட்டுமல்லாமல் இந்தியாவெங்கும் இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் இந்தப்படம், இப்போதைய நகர வாழ்வியலின் சிக்கல்களையும், தொழில்நுட்பம் புகாத மலை கிராமத்தின் அழகிய வாழ்வியலையும், நாம் மறந்து போன இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் அழகாகச் சொல்கிறது.

இப்படத்தில் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வின் பெருமையை சொல்லும் ஒரு காட்சியை அனைவரும் கொண்டாடி பகிர்ந்து வருகிறார்கள். படத்திலிருந்து சில காட்சித்துணுக்குகள் பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு, பல மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ், ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.