• Mon. May 6th, 2024

“சாட் பூட் திரீ” திரை விமர்சனம்..!

Byஜெ.துரை

Oct 4, 2023

யூனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து அருணாச்சாலம் வைத்தியநாதன் இயக்கத்தில் பூவையார், கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, ப்ரணிதி போன்ற சிறுவர்கள் நடித்து வெளி வந்த திரைப்படம் தான் “சாட் பூட் திரீ”.

இத்திரைப்படத்தில் சிநேகா,வெங்கட் பிரபு, யோகி பாபு, சாய் தீனா, காதல் சுகுமார் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறுவர், சிறுமியர்களான கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, ப்ரணிதி ஆகியோர்கள் நெருங்கிய நண்பர்கள்.

இந்த சிறுவர் சிறுமிகள் குடும்பங்கள் மிகவும் செல்வ செழிப்பாக உள்ள குடும்பம் தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணிபுரியும் எளிய குடும்பத்து சிறுவன் (பூவையார்)இவரும் அந்த சிறுவர்களுடன் நட்பில் உள்ளார்.

சிறுவர்களில் ஒருவனான கைலாஷ்,அம்மாவிடம் போராடி அனுமதி பெற்று நாய் ஒன்றை எடுத்து வளர்க்கிறார்கள்.ஒரே பையனான கைலாஷுக்கு அந்த நாய் ஒரு சகோதரன்.

ஒரு நாள் பெற்றோர் ஊரில் இல்லாத நிலையில் அந்த நாய் தொலைந்து விட, நாயைத் தேடி எல்லோரும் ஊரெங்கும் தேடி அலைகிறார்கள். அவர்கள் சந்திக்கும் திருடர்கள், ரவுடிகள், எளிய நல்ல மனிதர்கள், மயக்க மருந்து கொடுத்து நாய்களை உயிரோடு புதைக்கும் அரசு அலுவலர்கள் அவர்கள் சிறுவர்களுக்கு தந்த அனுபவ பாடங்கள் என்ன நாய் என்ன ஆனது சிறுவர்கள் என்ன ஆனார்கள் என்பதே இப்படத்தின் கதை.

சிறுவர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் யோகி பாபு, சாய் தீனா, காதல் சுகுமார் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல தங்கள் திறமையை காட்டி உள்ளனர். சிறுவர்களில் ஒருவனின் அப்பாவான சீக்கியர் தமிழ்ப் பற்று உள்ளவர் என்ற காட்சியை திரையில் காட்டியி ருப்பது தமிழ் பற்றைக் காட்டியுள்ளது.

அதே நேரம் பணக்கார வீட்டுப் பிள்ளைகளை விட ஏழை பிள்ளைகள் வாழ்வியல் அனுபவம் காரணமாக எதிர்பாராத அனுபவங்களை இயல்பாக சமாளிப்பதைச் சொன்ன விதம் அருமை. ஏழை வீட்டுப் பிள்ளைகளின் சினிமா மோகத்தை மறைமுகமாக காட்டி உள்ளார் பூவையார் கதாபாத்திரம்.

வீணை மேலோங்கும் ராஜேஷ் வைத்யாவின் இசை அருமை. வண்ணமயமகா படம் பிடித்த சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு அருமை. ஆறுசாமியின் கலை இயக்கம் ஆகியவை சிறப்பு. திரைக்கதை குழந்தைகள் படம் என்பது படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் ஆபாசம் இல்லாத குழந்தைகள் பார்க்க வேண்டிய திரைப்படம் “சாட் பூட் த்ரீ”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *