இளையான்குடி பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் (தி.மு.க நகரச்செயலர்) தலைமையில் நடந்தது. பொறுப்பு செயல் அலுவலராக சண்முகம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இளையாங்குடி பேரூராட்சி உட்பட்ட 18 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இளையான்குடியில் உள்ள 15 வது வார்டு திமுக கவுன்சிலர் இஸ்ரின் பேகம் பேசுகையில்..,
எனது வார்டில் இரண்டு வருடங்களாக புதிதாக மின் கம்பங்கள் அதில் தெருவிளக்குகள் அமைத்து தர போராடி வருகிறேன். இதற்காக பல மனுக்களும் கோரிக்கைகளும் தொடர்ந்து கொடுத்து வருகிறேன். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,
என்னால் வெளியே தலை காட்ட முடியவில்லை, மக்கள் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை என்று கோபத்துடன் பேசிவிட்டு இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியணும் என்று கூறி, கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே வந்து பேரூராட்சி அலுவலகம் முன்பாக பெட் சீட்டை விரித்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தற்போது பேரூராட்சி அலுவலகம் உள்ளே அமர வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.