திண்டுக்கல் அருகே தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஓடைப்பட்டி என்ற எஸ் பெருமாள் கோவில்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன.

இங்கு திண்டுக்கல் நகர் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீர் வாய்க்கால் மூலம் குளத்தில் சேர்கிளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் காய்ச்சல், சளி, தொண்டைவலி, அரிப்பு, தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளால் பாதிக்கப்படுகின்றனர்.
குடிநீர் கூட பச்சை நிறத்தில் வருகிறது. சீலப்பாடி ஊராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஒரு சில குடும்பங்கள் வேறு பகுதிக்கு சொந்த வீட்டையே காலி செய்து விட்டு சென்று விட்டனர். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களும் ஊரை காலி செய்ய நேரிடும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.











; ?>)
; ?>)
; ?>)