மதுரை திருப்பரங்குன்றம் கிரிவல பாதை அமைந்துள்ள 350 ஆண்டுகள் பழமையான பேசும் பெண் தெய்வம் அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. கடந்த 20 ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்த நாள் நடப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை 6:40 மணி அளவில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இரண்டாம் ஸ்தானிக பட்டர் ரமேஷ் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க திருக்கோவில் தெய்வங்களான அங்காள ஈஸ்வரி, பேச்சியம்மன் மற்றும் உப தெய்வங்களான ராக்காயி, இருளாயி, கருப்பாயி, கோட்டை கருப்பு, சோனி சாமி உட்பட 21 தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகாகுடமுழுக்கு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருப்பரங்குன்றம் மட்டுமின்றி மதுரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருக்கோவில் கமிட்டி சார்பாக செய்யப்பட்டிருந்தது.