• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

ByP.Kavitha Kumar

Feb 3, 2025

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர்களைத் தூவியும் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு, அண்ணா நினைவிடம் வரை நடைபெற்ற அமைதிப் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு , மெய்யநாதன் கயல்விழி செல்வராஜ் , மதிவேந்தன். மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சென்னை மேயர், துணை மேயர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.