மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் கோளின் சிலைக்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட நாளான இன்று மதுரை அவனியாபுரத்தில் உள்ள மருது பாண்டியர்களின் திரு உருவ சிலைக்கு திருப்புரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா மற்றும் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்த நிகழ்ச்சி மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், அவனியாபுரம் பகுதி செயலாளர் முருகேசன், மேற்கு பகுதி செயலாளர் கே பி சரவணன். மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் மருதுபாண்டியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)