கரூர் அருகே முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவுத் திட்டத்தில் ஒன்றான காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் திட்டமான மாயனூர் கதவணையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் கதவணையும், கரூர் மாவட்டம் மாயனூரையும், திருச்சி மாவட்டம் சீப்லாப் புதூரையும் இணைக்கும் பாலமும் கட்டப்பட்டுள்ளது. காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல்கட்டமாக இந்த கதவணை கட்டப்பட்டது. இது முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவுத் திட்டம் அவருடைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இன்று அவரது 102வது பிறந்த நாளை முன்னிட்டு கதவணை பகுதியில் மேடையில் அமைக்கப்பட்டிருந்த திருவுறுவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அதனை தொடர்ந்து கதவணையை பார்வையிட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவுத் திட்டமான இந்த இடத்தில் அவரது திருவுருவச் சிலை அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைப்பதாகவும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் படிப்படியாக நிறைவு செய்யப்படும் என்றார்.







; ?>)
; ?>)
; ?>)