தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் நகை அடகு கடை நடத்தி வருபவர் சிவா என்ற சிவசுப்பிரமணியன். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். கடனை செலுத்திய பின்னர், நகைகளை மீட்க சென்ற போது நகைகளை கொடுக்க சிவா மறுத்துவிட்டாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.மேலும். மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் பிரபு என்பவர். இங்கு வந்து ஏன் போராட்டம் நடத்தினர்கள்.
மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அவர்களிடம் புகார்கள் கொடுங்கள். எனவும் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறைக்கு. மறைமுகமாக உத்தரவிட்டார். எனவும் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் தகவல்கள் வெளியாகியுள்ளன.







; ?>)
; ?>)
; ?>)