யூகோ வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகை மூன்று துண்டுகளாக உடைந்திருந்த காரணத்தால் வங்கி மேலாளர் உத்தரவின் பேரில் சரி செய்து தருவதாக, வாங்கிய நகை மதிப்பீட்டாளர் உருக்கி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி ரத்னா நகரை சேர்ந்தவர் தம்பிராஜா மனைவி மல்லிகா. இவர் தேனி பெரியகுளம் சாலையில் உள்ள யூகோ வங்கியில் தன்னுடைய 7 பவுன் நகைகளை 2, 73,000ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.
நகையை திருப்பிய போது அடகு வைக்கப்பட்ட நகை 3 துண்டுகளாக உடைந்து இருந்தது. இது குறித்து வங்கி மேலாளிடம் கேட்டபோது, வங்கி லாக்கரில் வைக்கப்பட்டதால் நகைகள் உடைந்து இருக்கலாம் அதனை சரி செய்து தருவதாக கூறினார்.
வங்கி நகை மதிப்பீட்டாளர் நகையில் உள்ள தங்கத்தை எடுத்துவிட்டு வெள்ளியை கலந்து சரி செய்து கொடுத்த போது மீண்டும் நகை உடைந்தது. அப்போது வங்கி மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் நகையை உருக்கி மீண்டும் செய்து தருவதாக கூறினர்.
மீண்டும் நகையை சரி செய்து கொடுக்க ரூபாய் 45 ஆயிரம் பணத்தை வங்கி மேலாளர் உத்தரவின் பேரில் நகை மதிப்பீட்டாளர் கொடுத்தார்.பணத்தைப் பெற்றுக் கொண்ட நகை மதிப்பீட்டாளர் இதுவரை நகையை திருப்பி தராததால் இது குறித்து வங்கி மேலாளிடம் கேட்டபோது அதிர்ச்சி தகவல் வெளியானது.
நகை மதிப்பீட்டாளர் நகையை உருக்கி விற்பனை செய்து விட்டதால் அவரை வேலையை விட்டு நீக்கி விட்டோம். வங்கியில் அடகு வைக்கப்பட்டனா நகை உருக்கி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பலமுறை வங்கி மேலாளர் கேட்டபோது உரிய தகவல் தர மறுத்துவிட்டார். இதனால் நகையை இழந்த மல்லிகா தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளார்.