• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விண்ணைத் தொடும் விமானக்கட்டணம் பயணிகள் அதிர்ச்சி

Byவிஷா

Dec 23, 2023

கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தை முன்னிட்டு, விமானத்தின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை திருவனந்தபுரம் இடையிலான கட்டணம் ரூ.2,800-லிருந்து சுமார் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது. கொச்சி நகருக்கான கட்டணம் ரூ.3,000-லிருந்து சுமார் ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை – தூத்துக்குடி இடையிலான விமான கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.14,000 வரை உயர்ந்துள்ளது.
சென்னை – மதுரை இடையிலான கட்டணம் ரூ.3,314 லிருந்து ரூ.10,192 முதல் ரூ.17,950 வரை உயர்ந்துள்ளது. சென்னை – கோவை இடையிலான கட்டணம் ரூ.3,315 லிருந்து -ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை – திருச்சி இடையே ரூ.2,579-ஆக இருந்த கட்டணம் ரூ.9,555 வரை உயர்த்தப்பட்டுள்ளது.