கருப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும்போது அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்த மின் வயர் பேருந்தின் மேற்புறத்தில் விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட இந்த நிலையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர்.
பின்னர் பேருந்தை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தி மின் வயறை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இருப்பது அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் பேருந்து மீது மின் வயர் விழுந்த நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறுகின்றனர்.

மேலும் தாழ்வாக செல்லும் மின் வயற்களை அப்புறப்படுத்தவும் பேருந்து மீது விழுந்த மின் வயரை அப்புற படுத்தி பாதுகாப்பாக பேருந்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருப்பட்டியில் பல்வேறு பகுதிகளில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதாகவும் மின்வாரிய பணியாளர்கள் பாதுகாப்பாற்ற முறையில் செல்லக்கூடிய மின் வயர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பாதுகாப்பான வகையில் மின் வயற்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.




