• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திமுகவில் வெடித்த கோஷ்டி பூசல்

ByKalamegam Viswanathan

Oct 28, 2024

சோழவந்தான் திமுகவில் வெடித்த கோஷ்டி பூசல் மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு திமுகவினர் தனித்தனியாக மாலை அணிவித்தனர். சோழவந்தான் திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் மீது உள்ள அதிருப்தியே காரணம் என நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்பு ஏற்பட்டது.

மதுரை அருகே, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த வெங்கடேசன் எம் எல் ஏ மீது உள்ள அதிருப்தியில் சோழவந்தானில் நடைபெற்ற மருது
பாண்டியரின் குருபூஜை விழாவிற்கு வந்த வெங்கடேசன் எம்எல்ஏ உடன் சேர்ந்து செல்லாமல் புறக்கணித்து பேரூர் துணைச்செயலாளர் ஸ்டாலின் தலைமையில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மருதுபாண்டியர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக சோழவந்தான் பேரூர் திமுகவில் உட்க்கட்சி பூசல் தலைவிரித்தாடி வருகிறது .
சோழவந்தான் திமுக நிர்வாகிகள் இடையே உள்ள கோஷ்டி பூசலுக்கு திமுக எம்எல்ஏவான வெங்கடேசனை காரணம் என, குற்றம் சாட்டுகின்றனர். திமுக நிர்வாகிகள் இதற்கு காரணம் சோழவந்தானில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் எம்எல்ஏ பேரூர் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிப்பது இல்லை என்றும், ஒரு சிலருக்கு மட்டும் தெரிவித்து விட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு செல்வதாகவும், இதன் காரணமாக நீர் பூத்த நெருப்பாக இருந்த கோஷ்டி பூசல் நேற்று நடைபெற்ற மாமன்னர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் தனித்தனியாக மருதுபாண்டியர் படங்களுக்கு மாலை அணிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

காலை 10 மணிக்கு வருவதாக கூறியிருந்த வெங்கடேசன் எம் எல் ஏ 12 மணி வரை வரவில்லை. இதில், எம்எல்ஏ வின் ஆதரவாளர்கள் 10 மணி முதல் காத்திருந்த நிலையில் பேரூர் திமுக துணைச் செயலாளர் 1வது வார்டு ஸ்டாலின் தலைமையில் பேரூராட்சி கவுன்சிலர்கள் 2வது வார்டு முத்துச்செல்வி சதீஷ் 4வது வார்டு சிவா மற்றும் நிஷா கௌதம ராஜா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேரூர் முன்னாள் துணைச் செயலாளர் முனியாண்டி மற்றும் 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் 11.30 மணி அளவில் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கு தனியாக வந்து மாலை அணிவித்து சென்றனர். இதன்பிறகு 12 மணிக்கு மேல் வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தனியாக மாலை அணிவித்து சென்றார் .
இதுகுறித்து, திமுக நிர்வாகிகள் கூறுகையில் சோழவந்தானின் திமுக எம்எல்ஏ வெங்கடேசனின் சமீப கால செயல்பாடுகளால் கட்சியில் பலர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு வருடத்தில் வர உள்ள நிலையில் சோழவந்தான் திமுகவில் நடைபெறும் கோஷ்டி பூசலால் திமுகவின் வெற்றி கேள்விக்
குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது . மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மூர்த்தி தலையிட்டு கட்சியினர் இடையே உள்ள அதிருப்தியை சரி செய்ய வேண்டும் இல்லை
யென்றால், அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்ச்சிகளில் கோஷ்டி பூசல் பூதாகரமாக வெடிக்கும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தனர்.