பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் செய்யப்படுவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்த முதல்வர் முக.ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றவில்லை என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தற்போது ரூ.12,500 என்ற குறைவான அளவில் ஆண்டிற்கு 11 மாதங்கள் மட்டும் சம்பளம் வழங்கப்படுவதாக கூறியுள்ளனர். எனவே, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை மறுக்கவில்லை. இதுதொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரந்தரம்
