பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூட்டப்பட்ட பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொடர் அமளி காரணமாக பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்குக் கூடியன.
மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியவுடன், சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிடத் தொடங்கிவிட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் குறித்து முதலில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு வந்த நிலையில், ”அரசாங்கம் ஒவ்வொரு பிரச்சினைக்கும் பதிலளிக்க விரும்புகிறது.
சபை செயல்பட வேண்டும், நீங்கள் இங்கு கோஷங்களை எழுப்ப வரவில்லை. சபை விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செயல்படுகிறது. விதிகளின்படி எழுப்பப்படும் அனைத்து பிரச்சினைகளும் விவாதிக்கப்படும்” என ஓம். பிர்லா சொல்லி பார்த்துள்ளார். தொடர்ந்து அமளி நீடித்ததால், பிர்லா கூட்டத்தொடரை பிற்பகல் வரை ஒத்திவைத்தார். அதன்படிஇ பிற்பகல் 12 மணிவரை பாராளுமன்ற மக்களவை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம். பிர்லா தெரிவித்துள்ளார