உசிலம்பட்டி பகுதியில் பொதுநல அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சார்பாக பாப்பாபட்டி கண்மாய் சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமப்புற பகுதியில் உள்ள சில கண்மாய்களை பொதுநல அமைப்புகள் தங்கள் சொந்த செலவில் சீர் செய்யும் பணி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துவங்கப்பட்டது. முதல் கண்மாயாக பசுக்காரன்பட்டி பந்தாணி கண்மாய் சுத்தம் செய்யப்பட்டது.

நேற்று உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி பாப்பான்குளம் கண்மாயில் உள்ள சீமை கருவேல மரம் அகற்றும் பணியை லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் அறிவழகன் தலைமையில் சமூக ஆர்வலர் புலவர் சின்னன் முன்னிலையில் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் துவங்கி வைத்தனர் இந்த கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி சில நாட்கள் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கண்மாயின் சீரமைக்கும் பணியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநில துணைச் செயலாளர் நேதாஜி, 58 கால்வாய் விவசாயிகள் சங்கம் தலைவர் சின்ன யோசனை, செயலாளர் பச்ச துண்டு பெருமாள், உசிலை நகர அரிமா சங்கம், உசிலம்பட்டி வளர்ச்சி மையம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், எக்ஸ்னோரா உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பாப்பாபட்டி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
