இராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பங்குனி பூக்குழி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதன் பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சமுதாயம் சார்பில், திருவிழா கொண்டாடப்பட்டு சாமி வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான 9–ம் நாள் பூக்குழி திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி இன்று நடைபெற்றது.

பூக்குழி திருவிழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் வரிசையாக 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
இந்த பூக்குழி விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சேத்தூர், தளவாய்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை
தலைவர் வி.கே. விஜயகுமார், செயலாளர் பி.ஜெயராம், பொருளார் பாக்யராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த 10 நாள் திருவிழாவில் அனைத்து சமுதாய நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.