பாலமேட்டில் அருள்மிகு அன்னை பத்திரகாளி அம்மன் அருள்மிகு மாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு அன்னை பத்திரகாளி அம்மன், அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து,
காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து திங்கட்கிழமை மேளதாளங்கள் முழங்க, முளைப்பாரி, தண்ணீர் செம்பு ஊர்வலம் வந்து முளைப்பாரி திண்ணையில் வைத்து கும்மி அடித்து அபிஷேகம். தொடர்ந்து, சக்தி கிரகம் அலங்காரம் செய்து வான வேடிக்கையுடன் நகர்வலம் வருதல். பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் வான வேடிக்கையுடன் மாவிளக்கு எடுத்து நகர்வலம் வருதல், அன்று மாலை பால்குடம் எடுத்து நகர்வலம் வருதல், வானவேடிக்கையுடன் முளைப்பாரி நகர் வளம் வருதல்
தொடர்ந்து, கோயிலில் உள்ள சக்தி கரகத்துடன் முளைப்பாரி தூக்கி கொடிக்
கம்பத்தில் உள்ள கொடியை இறக்கி அங்குள்ள முளைப்பாரிக்கு அபிஷேகம் செய்து சக்தி கரகத்துடன் கோயிலில் உள்ள முளைப்பாறியும் தூக்கி மங்கள வாத்தியத்துடன் மேளம் தாளம் முழங்க வான வேடிக்கையுடன், முளைப்பாரி தோட்டத்தில் இறக்கி வைத்து கும்மி அடித்து அபிஷேகம் செய்து, தண்ணீர் விடுதல் நிறைவாக மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, பாலமேடு இந்த நாடார்கள் உறவின் முறை சங்கம் செய்திருந்தனர்.






