திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோ.காமாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சென்றாய பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

பாரம்பரிய வழக்கப்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நிகழ்வாக மலை மீது அமர்ந்திருக்கும் சென்றாய பெருமாள் காமாட்சிபுரம் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து ஒரு வார காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் இறுதி நாளில் பழமையான மரத்திலான சென்றாய பெருமாள் சிலை அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் பக்தர்களால் தூக்கி வரப்பட்டது. உருமி மேளம் முழங்க ஆடிய வண்ணம் சென்றாய பெருமாள் பல்லக்கு கிராமம் முழுவதும் ஊர்வலமாக வந்தது.

பின்னர் ஊர் மந்தையில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சென்றாய பெருமாள் உற்சாகமாக ஆடிய வண்ணம் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவிழா முடிந்து ஊர் பொதுமக்கள் பெருமாளை மீண்டும் மலை ஏறச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது
இதனைத் தொடர்ந்து சென்றாய பெருமாள் கிராமத்தை விட்டு போக மனம் இல்லாமல் கோபித்துக் கொண்டு வேகமாக மலைக்குச் செல்லும் காட்சியும் திருவிழாவில் நடைபெற்றது
இத்திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.




