பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலி சார்பில் நடைபெறும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் 2025-2026 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

அதற்க்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இளநிலை அர்ச்சகர் சான்றிதழ் ஓராண்டு பயிற்சியும், ஓதுவார் பள்ளியில் முழுநேரம் மூன்றாண்டு பயிற்சியும், பகுதிநேரம் நான்காண்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இதற்கான கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 14 வயதிலிருந்து 24 வயது வரையும், ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 13 வயதில் இருந்து 20 வயது வரையும் இருக்க வேண்டும்.
மேலும் இந்து மதத்தை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை
palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயிற்சி பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் தோறும் முழுநேர பயிற்சிக்கு ரூபாய் பத்தாயிரமும், பகுதி நேர பயிற்சிக்கு ரூபாய் ஐந்தாயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
மேலும் தங்குமிடம். உணவு, உடை பாடப்புத்தகங்கள். நோட்டுகள் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் கட்டணமின்றி திருக்கோயில் மூலம் வழங்கப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அனுப்பங்களை இணைஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி. 624 601
என்ற முகவரிக்கு அனுப்பவும் அறிவுறுத்தியுள்ளனர்.