• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அடி வாங்காமல் பாகிஸ்தான் திருந்தாது..,

ByG.Suresh

May 6, 2025

மத்தியில் வெளிப்படையான ஆட்சி நடப்பதால் செய்தியாளர்களை பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் இந்தியாவின் எதிரிகள் உள்ளனர். இந்த தேச விரோதிகளை மாநில அரசு கண்காணிக்க வேண்டும்.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்கும்.

சிவகங்கையில் எச் ராஜா பேட்டி.

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு , பஜக சார்பில் பஹால்காம் தாக்குதலை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது, 30 ஆண்டுகளாக இந்தியாவில் தீவிரவாதத்தை வளர்த்து வருவதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கூறியுள்ளதால், அவர்களுக்கு பாடம் கற்பிக்க பொருளாதார ரீதியான அடியை நாம் வழங்க வேண்டும்.

சிந்து நதிநீரை நிறுத்தி வைத்துளோம், இதன் மூலம் பாகிஸ்தானில் 80 சதவீத விவசாயம், நீர் மின்சக்தி உற்பத்தியும் முடங்கி போய் உள்ளது. இந்த நடவடிக்கை பத்தாது என இறுதிய அரசு நினைத்தால் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் அல்லது கார்கிலில் நடைபெற்றது போன்ற மினி யுத்தத்தை இந்திய அரசு மேற்கொள்ளும். ஆனால் தமிழகத்தில் கால நிலவரம் தெரியாத தேச பக்தி இல்லாத அரசியல் கட்சியினர் போர் வேண்டாம் என கூறி வருகின்றனர் என்றார்.

பாகிஸ்தானில் வீதிகள் தோறும் பயங்கரவாதிகள் உள்ளனர் ஆனால் அங்கு பாகிஸ்தானின் எதிரிகள் கிடையாது. ஆனால் தமிழகத்தில் இந்தியாவின் எதிரிகள் உள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த தேச விரோதிகளை மாநில அரசு கண்காணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சர்வே என்பது சில ஊகங்களின் அடிப்படையில் நடப்பது. அது உண்மையான சூழ்நிலையும் எதார்த்தத்தையும் பிரதிபலிக்காது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசு தீர்மானத்தில் உள்ளது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது நடவடிக்கை எடுக்காத இந்திய அரசு காஷ்மீர் தாக்குதலுக்கு போர் வரை நடவடிக்கை எடுத்து வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கோவம் அடைந்த எச். ராஜா நீங்கள் எந்த பத்திரிக்கை என்பதை கூற வேண்டும் என மிரட்டினார்.

பின்னர், 2014 வரை காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு நீடித்தது வரை 680 மீனவர்கள் உயிரிழந்தனர். ஆனால் அதன் பிறகு 11 ஆண்டுகளில் ஒரு மீனவர் மட்டுமே உயிரிழந்ததாகவும் அவரும் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய வெற்றி பெற்றது என்பதற்காக எனவும், காஷ்மீரையும், தமிழக மீனவர்களையும் இணைத்து கேட்கப்பட்ட கேள்வி தமிழகத்தில் பிரிவினை வாதத்தை வளர்க்கும் எண்ணத்துடன் கேட்கப்பட்டுள்ள கேள்வி எனவும் இதனை வன்மையாக கண்டிக்கதக்கது என்றார்.

பாகிஸ்தானில் அணு ஆயுதம் உள்ளதாக நாம் கவலைப்பட வேண்டாம். அவர்களிடம் பீரங்கிகள் இருக்கிறது குண்டுகள் இல்லை. துப்பாக்கி இருக்கிறது ரவை இல்லை. பாகிஸ்தானின் பூச்சாண்டிக்கு நாம் பயப்பட வேண்டியதில்லை நான்கு நாட்களில் பாகிஸ்தான் ஒரு நாடாக இருக்காது. பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்கும் என்று உறுதிப்பட தெரிவித்தார். மத்தியில் வெளிப்படையான ஆட்சி நடப்பதால் செய்தியாளர்களை பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என எச். ராஜா கூறினார்.