• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பூரில் பேஜ்3 சொகுசு சலுான் சேவை துவக்கம்…

BySeenu

Oct 25, 2023

திருப்பூரில் பேஜ்3 சொகுசு சலுான் மற்றும் மேக்அப் ஸ்டுடியோ நெ. 4 & 5, யுனிவர்சல் தியேட்டர் ரோடு பின்புறம், வளம் ரோடு, கண்ணிபிரன் காலனி, வள்ளிபாளையம், திருப்பூரில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அழகு சேர்க்கும் சொகுசான சேவையை வாடிக்கையாளர்களுக்கு துவக்கியுள்ளது. சாதாரண மக்கள் முதல் மிக முக்கியஸ்தர்கள் வரை வாடிக்கையாளர்களாக உள்ள இந்த யுஎஸ்பி பிராண்ட், மலிவானது மட்டுமின்றி சொகுசானது. சலுானில் சிறப்பான பயிற்சியும், சான்று பெற்ற பணியாளர்களைக் கொண்டு செயல்படுகிறது. தென்னிந்திய திரைப்பட தொழில் துறையுடன் பங்குதரராக இணைந்து செயல்பட்டு வருகிறது. திரைப்பட நட்சத்திரங்களுடனும், நிகழ்ச்சிகளுடனும், படங்களுக்கான ஒப்பனைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
பேஜ்3 சொகுசு சலுான், கவர்ச்சிகரமான தொழில் முனைவோரான சி.கே.குமாரவேல் மற்றும் திருமதி வீணா குமராவேலு அவர்களின் அறிவுக்குழந்தையாக உருவாகியுள்ளது. இந்தியாவின் அழகு மற்றும் நலத் தொழில் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் அனுபவம் கொண்டவர்கள். திரு. சண்முக குமார் இதன் தலைமை செயல் அதிகாரியாகவும், இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். ஒவ்வொருவருக்கும் சிறப்பான சொகுசான சேவை அளிப்பதை விருப்பமாக கொண்டு முன்னணியில் இருந்து வருகிறார். உலக அளவில் அனுபவத்தை கற்று தேர்ந்தவர். இவர்களது கனவு மற்றும் தொலை நோக்கு பார்வை, வணிக மேம்பாட்டு திறன் ஆகியவை இந்த நிறுவனத்திற்கு தென்னிந்திய அளவில் அழகு கலை தொழிலில் சிறந்த பெயரை ஏற்படுத்தி வருகிறது.
பேஜ்3 சொகுசு சலுான் மற்றும் மேக் ஓவர் ஸ்டுடியோ, தற்போது திருப்பூர் நகரில் அடியெடுத்து வைத்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஈடுஇணையற்ற சேவையை, அனுபவமிக்க பணியாளர்களைக் கொண்டு, அமைதியான சூழலில், சிக்கனமான கட்டணத்தில் வழங்கவுள்ளது.
திருப்பூர் நகருக்கு முதல் முறையாக முடிக்காக இத்தாலியின் புகழ்மிக்க டாவினஸ் பிராண்டை பேஜ்3 வழியாக அறிமுகம் செய்கிறது. தோல் சேவைக்கு உலகில் புகழ்மிக்க ஸ்பெயினின், ஸ்கிண்டர் மற்றும் டெபிலைவ் முறையையும், நகம் பாதுகாப்பிற்கு ப்ளு ஸ்கையையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த கிளையை, முன்னணி பெண் தொழில் முனைவோர் திருமதி சுபா ஏற்று நடத்தி வருகிறார்.
இந்த பேஜ் 3 சலூனை பிரபல சின்னத்திரை நட்சத்திரங்களான டி எஸ் கே எனப்படும் சரவணன் குமார் மற்றும் பிரணிகா தக்க்ஷு ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.