

• எந்த ஒரு செயலிலும் உனக்கு உதவ பல உறவுகள் இருந்தாலும் கூட..
உன் உழைப்பு என்ற ஒன்றிற்கு அங்கு வேலை இல்லையென்றால்
உன் முயற்சிகள் அனைத்தும் வீண்.!
• பிடித்தவர் என்பதற்காக தவறுகளை சுட்டிக்காட்ட மறக்காதீர்கள்..
பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பார்க்காதீர்கள்.!
• மரம் போல மனிதன் வளர்கிறான் என்பது பெருமை அல்ல..
மரம் போல் அவன் பயன்படுகிறான் என்பதே பெருமை.!
• தயங்குபவர்களுக்கு அதிகாரம், புகழ், செல்வம், வெற்றி
போன்றவை கிட்டவே கிட்டாது.!
• நாம் செய்யும் காரியத்தை மட்டும் வைத்துக் கொண்டு,
இந்த உலகம் நம்மை அளவிடுவதில்லை..
அதில் கிடைக்கும் பலனை வைத்தே அளவிடுவார்கள்.!
• எவரிடமும் எதையும் கற்றுக்கொள்ள விரும்பாதீர்கள்..
அவர்களே உங்களுக்கு புதியதாக ஒரு பாடம் புகட்டி விட்டுச் செல்வார்கள்.
• எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பதை அறிந்தும் ஏனோ மனிதர்கள்
எல்லாவற்றையும் அடைய ஆசைப்படுகிறார்கள்.
