• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 31, 2025

எது தேவையில்லை என்பதில்
தெளிவாக இருந்தால்
எது தேவை என்று தேர்வு
செய்வது சுலபம்…!!

பொய்யான உபசரிப்புகளைவிட
உண்மையான திமிர் அழகானது…!!

பெருந்தன்மையாக நடிப்பதைவிட
இயல்பான அகம்பாவம் மேலானது….!!

சோதனையைக் கொடுத்த கடவுளுக்கு
வெற்றியை கொடுக்க
ஒரே ஒரு நொடி போதுமானது!
முயற்சியைக் கைவிடாதே!!

இலக்கில் கவனமாயிரு!!!
ஒருத்தர் நம்மள வேணாம்னு தூக்கி எறிஞ்சா,
நமக்கானவங்க அவங்க இல்ல
என்பது தான் பொருளே தவிர,
நமக்கென இனி யாருமே இல்லை
என்பது அர்த்தம் அல்ல.
பழகும் போது வைரமாகவும்,
பழகிய பின் வெறும் கல்லாகவும் மாறி விடுகிறார்கள் சிலர்.
சகிப்புத் தன்மை என்பது பிடித்த ஒரு விஷயத்துக்காக
பிடிக்காத ஒன்பது விஷயங்களை பொறுத்துக் கொள்வதே……!!